9.5 லட்ச மாணவர்களுக்கு TAB.. மம்தா பானர்ஜி அறிவிப்பு..!

9.5 லட்ச மாணவர்களுக்கு TAB.. மம்தா பானர்ஜி அறிவிப்பு..!

மேற்கு வங்க அரசு தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் கண்டறிவதற்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் விலையை ரூ.950 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன் முன்னதாக, ரூ. 1,250 ஆக இருந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களால் ஆர்டி-பிசிஆர் சோதனையின்  கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற நடவடிக்கையில், தேசிய தலைநகரின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கமும் தனியார் ஆய்வகங்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையின் விலையை ரூ .2,400 லிருந்து ரூ .800 ஆக குறைத்தது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையிலான அரசாங்கமும் கொரோனா ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கான விலையை ரூ .800 லிருந்து, அதை ரூ .400 ஆக குறைத்தது.

இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “நாங்கள் சோதனைச் செலவைக் குறைத்த்துள்ளோம். இதை மேலும் குறைக்க நாங்கள் விரும்பினோம், இதனால் மக்கள் மேலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று  கூறினார். மேலும்,  அரசுப் பள்ளிகளில் படிக்கும் 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் மாணவர்களுக்கு கணினி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை, இந்நிலையில், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 9.5 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை எளிதாக்குவதற்காக கணினிகள் வழங்கப்படும் என்று மம்தா கூறினார்.

வங்காளத்தில், 36,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அதில், 14,000 உயர்நிலை பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube