லண்டனில் படமாக்கவுள்ள டாப்ஸியின் 'ஷபாஷ் மிது'.!

டாப்ஸி பன்னு நடிக்கும் ஷபாஷ் மிது படத்தின் படப்பிடிப்பை லண்டனில்

By ragi | Published: Jul 11, 2020 04:08 PM

டாப்ஸி பன்னு நடிக்கும் ஷபாஷ் மிது படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆவார். இவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம் ஷபாஷ் மிது. ராகுல் தோலாகியா இயக்கும் இந்தப் படத்தில் மிதாலி ராஜாக டாப்ஸி பன்னு நடிக்கிறார். சமீபத்தில் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு முடிந்ததும் படத்தின் முக்கிய பகுதி லண்டனில் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரான வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிஓஓ அஜித் அந்தரே கூறுகையில், இங்கிலாந்தில் எப்போது படப்பிடிப்பு நடத்த முடியும் என்பதை கண்டறிவதோடு, அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு தேதிகளை குறிக்க வேண்டும். புகைப்படங்களை பார்த்து விட்டு படப்பிடிப்புக்குகான இடங்களை தீர்மானிக்க இயலாது, எனவே அது சற்று சவாலாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த ஊரடங்கில் ஸ்கிரிப்ட்க்கான பணிகளையும், இசை பணிகளையும், ஆன்லைன் மூலம் ஆடிசன்கள் நடத்தியும் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் படம் குறித்து அவர் பேசுகையில், கிரிக்கெட் என்பது அனைவருக்கும் பைத்தியம் தான், அந்த வகையில் ஆண் கிரிக்கெட் வீரர்களை குறித்த ஒவ்வொரு கதையையும் நினைவில் வைத்திருக்கும் நாம், பெண் கிரிக்கெட் வீரர்களின் போராட்டத்தை பற்றி அறிந்தது இல்லை, அவர்களில் சாதிப்பவர்களை புறக்கணித்து விட்டோம். ஆனால் இந்த கதை அவ்வாறு ஒரு கதை சொல்வதாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படம் ஜனவரி 2021ல் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc