#T20WorldCupFinal: கோப்பை யாருக்கு? டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங் தேர்வு!

#T20WorldCupFinal: கோப்பை யாருக்கு? டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங் தேர்வு!

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை.

ஐக்கிய அரசு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி-யின் 7-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி தற்போது இறுதி போட்டியை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. குறிப்பாக இரு அணிகளும் இதுவரை டி-20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை. முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 போட்டிகளை வென்றிருந்த நியூசிலாந்து அணி, அரையிறுதியில் இங்கிலாந்தைத் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதுபோன்று சூப்பர் 12 சுற்றில் கடினமான க்ரூப்பில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

துபாயில் நடைபெறும் போட்டி என்பதால் இதிலும் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும். துபாய் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 10 போட்டிகளில் 9 முறை சேஸ் செய்யும் அணியே வென்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. எனவே, இதுவரை இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் ஆட்டம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்) அணி வீரர்கள்:

ஆரோன் பின்ச் (c), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (w), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்) அணி வீரர்கள்:

மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன்(c), டிம் சீஃபர்ட்(w), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரென்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube