#T20 WorldCup Final: இங்கிலாந்து-பாகிஸ்தான் இன்று மெல்போர்னில் இறுதிப்போட்டி! சாம்பியன் பட்டம் யாருக்கு?

டி-20 உலககோப்பையின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பதினாறு அணிகளுடன் ஆரம்பித்த இந்த டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்னில் நடைபெறுகிறது.

சிட்னியில் நடைபெற்ற முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிககுள் நுழைந்தது, அடிலைடில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதானம் பவுன்ஸ்க்கு ஏற்ற பிட்ச்சாக இருக்கும், மேலும் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 167 ரன்கள் குவித்திருக்கிறது. போட்டி நாளான இன்று மெல்போர்ன் மைதானத்தில் 90% மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. போட்டியை முடிவு செய்ய இரு அணிகளுக்கும் குறைந்தது 10 ஒவர்களாவது விளையாடியிருக்க வேண்டும்.

இன்று மழை பெய்து விளையாட முடியாத பட்சத்தில் இன்னொரு நாள்(திங்கள் கிழமை) ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாளையும் மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அப்படி இருநாட்களும் மழை பெய்து ஆட்டம் கைவிடப்படும் நிலையில், இரு அணிகளும் சாம்பியன் என அறிவிக்கப்படும்.

பாகிஸ்தான், இங்கிலாந்து இரு அணிகளும் இதுவரை 27 டி-20களில் நேருக்குநேர் மோதியுள்ளன, இதில் 18இல் இங்கிலாந்து அணியும் 9இல் பாகிஸ்தான் அணியும் வென்றுள்ள. டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இருமுறை இரு அணிகளும் மோதியதில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் வென்றிருக்கிறது.

சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து அணி 7போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 4-3 என்ற கணக்கில் வென்றது. இந்த டி-20 உலகக்கோப்பை தொடரிலும் இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்குகின்றன. 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியும், 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.

இந்த உலகக்கோப்பையை வெல்லும் அணி 2 ஆவது முறை டி-20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment