இந்தியா ,வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி -20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜான் காம்ப்பெல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கின. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்திலேயே ஜான் காம்ப்பெல் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.
பின்னர் நிக்கோலஸ் பூரன் களமிங்கிறனார்.மூன்றாவது ஓவரில் எவின் லூயிஸ் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.தொடக்க வீரர்கள் இருவருமே ரன்கள் எடுக்காமல் வெளியேறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி பரிதாப நிலையில் இருந்தது.
பிறகு இறங்கிய கீரோன் பொல்லார்ட் , நிக்கோலஸ் பூரன் இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர் இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் புவனேஷ்குமார் 2 விக்கெட்டையும் , நவ்தீப் சைனி 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
96 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டத்தின் தொடக்கத்திலே ஷிகர் தவான் 1 ரன்னில் வெளியேறினர்.
பின்னர் இறங்கிய விராட் கோலி களமிறங்கினர். விராட் கோலி ,ரோஹித் சர்மா இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினார்.நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 24 ரன்னில் அவுட் ஆனார்.
பிறகு இறங்கிய ரிஷாப் பந்த் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார். பின் அடுத்தது இறங்கிய கிருனல் பாண்ட்யா 12 , மணீஷ் பாண்டே 19 ரன்னில் அவுட் ஆக இறுதியாக இந்திய அணி 17.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…
Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…