, ,

இதுபோன்ற அறிகுறிகள் இருக்கா? சர்க்கரை நோய் வர வாய்ப்புண்டு..!எப்படி இதனை தடுப்பது?

By

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனை எப்படி தடுப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

   
   

முன்னர் பணக்கார வியாதி என்று அழைக்கப்பட்டு வந்த நீரிழிவு நோய் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது உணவுப் பழக்க முறை. முன்பிருந்த காலத்தில் உணவு பழக்கங்கள் மிகவும் ஆரோக்கியமானதாகவும், சரியானதாகவும் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் என ருசிக்கு ஏற்றார் போல் உண்டு வாழ்வதால் நோய்களும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீரிழிவு நோய் பல பேருக்கு உள்ளது.

இதன் ஆரம்பகட்டத்திலேயே அறிந்து கொள்வதற்கு இதன் அறிகுறிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக தாகம் அதிகமாக எடுத்தால், சோர்வு உணர்வோடு இருந்தால், அடிக்கடி குடல் அசைவுகள் இருப்பதை உணர்ந்தால், திடீரென உடல் எடை விறுவிறுவன குறைந்தால், அதிகமாக பசியின்மை இருந்தால், கால்கள் கைகளில் கூசுவது போன்ற உணர்வு இருந்தால், நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற அறிகுறிகள் இருக்கின்றது என்றால் உடனடியாக நீங்கள் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்வது சிறந்தது.

இந்த நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே அறிகுறிகளை தெரிந்து கொண்டீர்கள் என்றால் நீங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மருந்து மாத்திரை இல்லாமல் உணவு பழக்க வழக்கங்களிலேயே கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை பரிசோதனையில் உங்களுக்கு சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தால் நிச்சயமாக மருத்துவரை அணுகி அதற்கு ஏற்றார் போல் உணவு பழக்கங்கள் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பரிசோதனையில் நீரிழிவு நோய் இல்லை என்று தெரிந்தால் நீங்கள் முன்னெச்சரிக்கையாக சில உணவு பழக்கங்களை கடைப்பிடித்து வருவது மிகவும் நல்லது.

சர்க்கரை

உங்கள் தினசரி உணவு பழக்கங்களில் சர்க்கரை என்பதை நீக்கி விடுங்கள். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பழங்கள், நாட்டு சர்க்கரை, தேன், வெல்லப்பாகு இது போன்ற இயற்கையான சர்க்கரை அடங்கிய பொருட்களை பயன்படுத்துங்கள். இதனுடன் தினமும் யோகா செய்து வருவது சிறந்த பலனை உங்களுக்கு அளிக்கும்.

தூக்கம்

நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறிகள் இருப்பவர்கள் சரியாக ஏழு மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். நன்கு தூங்கி எழுந்திருப்பதன் மூலம் உங்களது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும். மேலும் உடல் மற்றும் மன அழுத்தம் இதனால் குறைகிறது. ஹார்மோன்களை கட்டுக்கோப்புடன் வைக்க நல்ல தூக்கம் உதவியாக இருக்கும்.

உணவு

நீரிழிவுக்கு முந்தைய அறிகுறிகள் இருப்பவர்கள் நிச்சயமாக சரியான உணவுப் பழக்க முறைகளை கடைபிடிப்பது அவசியம். உணவு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு பழக்கம் என்பது அவசியமான ஒன்று. காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சரியான இடைவெளியில் நீங்கள் உணவு உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு காலை எட்டு மணிக்கு சாப்பிடுவதும், அடுத்த நாள் 10 மணிக்கு சாப்பிடுவதும் என்ற முறையற்ற உணவு பழக்கங்களை தவிர்த்து விடுங்கள். ஒரே மாதிரியான உணவு பழக்க முறைகளை கடைபிடிப்பது மிகவும் நன்மை அளிக்கும்.

Dinasuvadu Media @2023