தமிழக மாணவிக்கு சுவீடன் விருது.. முதல்வர் வாழ்த்து.!

திருவண்ணாமலையை சேர்ந்த அனிஷா உமாசங்கர் என்ற மாணவி  சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இளம் கண்டுபிடிப்பாளர் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதில், பட்டயம், பதக்கம் மற்றும் இந்திய மதிப்பில் ரூ. 8 லட்சத்து 63 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த தொகை தன்னுடைய வருங்கால கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படும் என வினிஷா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு  ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இளம் வயதிலேயே அறிவியல் மீது ஆர்வம்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தற்போது சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும் என தெரிவித்துள்ளார். яндекс

author avatar
murugan

Leave a Comment