ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 5 பேர் நாளை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.!

கேரளா தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 5 பேர் நாளை ஆஜராக கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டி ஒன்றில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, கடத்தலில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரே‌‌ஷ் ஈடுபட்டுள்ளார் என்பது வெளிவந்தது. பின்னர் அவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 5 பேர் நாளை ஆஜராக கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சுவலி காரணமாக திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்