பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் - என்ஐஏ

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த

By leena | Published: Jul 13, 2020 05:58 PM

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தபோது அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த  தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கும், சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், இந்த தங்கக் கடத்தல் தொடர்பாக 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்  தலைமறைவான ஸ்வப்னா பெங்களூரில் இருப்பதாக என்ஐஏவிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு  அங்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள் அவரையும், சந்தீப் நாயரை கைது கைது நேற்று பிற்பகல் கேரளாவிற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில், இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதையடுத்து, பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்ததால், அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில்,  தற்போது ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே தங்க கடத்தல் மேற்கொண்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc