தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

8

மக்களவை  தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அமமுக கட்சிக்கு ஆதரவாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டதாக 2 அரசு பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி ,ஆசிரியர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்துள்ளார்.