ஓடிடியில் வெளியாகிறதா சூர்யாவின் அடுத்த படம்.?

சூர்யா நடித்து வரும் ஜெய்பீம் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டி திரையரங்குகள் திறந்தவுடன் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அல்லது இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் சூர்யா இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜெய்பீம் என்ற படத்தில் நடிக்கிறார். பழங்குடியின மக்களின் பிரச்சனைகள், அவர்களது வாழ்க்கை ஆகியவற்றை முக்கியமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சூர்யா பழங்குடியின மக்களுக்காக போராடும் வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23-ஆம் தேதி வெளியீடபட்டது.

இந்த நிலையில், இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் பரவி வருகிறது. அந்த வகையில், சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும் ஓடிடியில் வெளியிடுவதாக தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை தியேட்டரில் வெளியீட மட்டுமே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் படம் வெளியான பிறகே அமேசான் பிரேமில் வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் நிலையை வைத்து படத்தின் ரிலீஸ் தேதி இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடித்த சூரரைப் போற்று அமேசான் பிரேமில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜீஷா விஜயன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்தை 2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கிறார்.