,

சூர்யா பிறந்தநாளில் கிளிம்ப்ஸ் வீடியோ! மாஸ் போஸ்டருடன் வெளியானது சூப்பர் அறிவிப்பு!

By

Kanguva Fan Made Posters

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் ஜூலை 23ம் தேதி ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவிப்பு.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

Kanguva poster
Kanguva poster [Image source : Twitter/
@jayprints_]

இந்த கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். இப்படத்தில் இருந்து சூர்யாவின் முகத்தை காட்டாமல் படக்குழு ட்ரைலரில், அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காமிக்கலாம் என சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.

GlimpseofKanguva
GlimpseofKanguva [File Image]

இந்த நிலையில், தற்போது கங்குவா திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சூர்யா முகம் தெரியாமல் பாதி பகுதி உடல் தோற்றம் கொண்ட போஸ்டரை வெளியிட்டு, படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதாவது வரும் ஜூலை 23ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை வைத்து பார்க்கையில் சூர்யாவின் தோற்றம் பயங்கரமாக இருக்கும் என தெரிகிறது.

மேலும், கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியுடன் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.