மூணாறு நிலச்சரிவு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட சூர்யா.!

மூணாறு நிலச்சரிவு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட சூர்யா.!

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் தானும் பங்கெடுத்து கொள்வதாக சூர்யா உருக்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

கேரளாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தற்போது வரை 52பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி மாயமான 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் 5வது நாளாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இச்சமயவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கேரளா, இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரழந்திருப்பது வேதனை அளிக்கிறது. குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் பிறந்த மண்ணை விட்டு பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்து போனது தாங்க முடியாத துயர நிகழ்வு. நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.