அமேசான் OTT தளத்தில் தொடர்ந்து வெளியாக காத்திருக்கும் சூர்யா திரைப்படங்கள்.!

சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ள 4 திரைப்படங்கள் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் வாயிலாக பல தரமான படங்களை தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். கடைசியாக 2டி நிறுவன தயாரிப்பில் சூர்யாவே நடித்து வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் சூர்யா வெளியிட்டிருந்தார்.

தற்போது அதே போல, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள 4 திரைப்படங்களை அமேசான் நிறுவனம் வாங்கி அடுத்த மாதம் முதல் மாதம் தலா ஒரு படம் என வெளியிட உள்ளது. அதில் முதல் படமாக செப்டம்பரில்அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கியுள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் எனும் திரைப்படம் வெளியாக உள்ளது. அடுத்ததாக அக்டோபர் மாதத்தில் உடன்பிறப்பே எனும் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சசிகுமார் – ஜோதிகா, அண்ணன் – தங்கையாக நடித்துள்ளனர். இரா.சரவணன் என்பவர் இயக்கியள்ளார்.

அடுத்ததாக நவம்பர் மாதம் இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் வெளியாக உள்ளது.  அடுத்ததாக அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடித்துள்ள ஓ மை டாக் (OhMyDog) எனும் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த தகவல்களை அமேசான் நிறுவனம் மற்றும் 2டி பட நிறுவனமும் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.