சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சூர்யா 40 அப்டேட்.!

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  ஜூலை 23-ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியீடப்படவுள்ளதா தகவல்.

நடிகர் சூர்யா தற்போது தனது 40- வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல்  படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது .

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.