காக்க காக்க -2 ஹீரோ நடிகர் சூர்யா இல்லையாம்..!இவர்தான் ஹீரோவாம் ..!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதல் ஹிட் படமாக அமைந்தது காக்க காக்க. இந்த படம் கடந்த 2003 ஆம் ஆண்டு  வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஒரு படம்.படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி ஜோதிகா நடித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆனது தற்போது உருவாகவுள்ளது என்ற பேச்சு சினி வட்டாரத்தில் சமீபகாலமாகவே அதிகமாக எழுந்தன. இது குறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக சூர்யாவை வைத்து எந்த ஒரு  படமும் இயக்கவில்லையாம் தற்போது அவர் நடிகர்  விஷாலை வைத்து தான் புதிததாக ஒரு படம் ஒன்றை இயக்கவுள்ளாராம்.

மேலும் காக்க காக்க-2 விற்காக நடிகர் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் விஷாலை சேர்க்கிறாரா என்று  தெரியவில்லை. மேலும் படத்தை கே.பி.பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment