மார்ச் 20-ம் தேதி தூக்கு ! நிர்பயா குற்றவாளி வழக்கு மீண்டும் தள்ளுபடி

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகளுக்கு மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதியை அறிவித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.அதாவது,குற்றவாளிகள் 4-பேருக்கும் மார்ச் 20-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு இடையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல்  செய்தார். அதில் தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு  தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்தார் . இந்நிலையில் அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 

 

Recent Posts

சுதந்திரம் தான் முக்கிய காரணம் ..! போட்டிக்கு பின் கம்மின்ஸ் கொடுத்த ஸ்டேட்மென்ட்!!

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17-…

8 mins ago

கோட் படத்தில் விஜயகாந்த்! உண்மையை உடைத்த பிரேமலதா!

Vijayakanth : கோட் படத்தில் விஜய்காந்த்  AI மூலம் வரவுள்ளதாக அவருடைய மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் AI மூலம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்…

8 mins ago

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை !! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ !!

Gold Price: சென்னையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

26 mins ago

பாஜக ஏன் வரவே கூடாது? – முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

MK Stalin: பாஜகவையும், அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் 3 தினங்களில் நடைபெற…

1 hour ago

2-வது தோல்வியை சந்திக்க போகும் அணி எது ..? கொல்கத்தா – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின்-17வது சீசனின் இன்றைய போட்டியில் கொல்கத்தா…

1 hour ago

கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல்2024:பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய…

11 hours ago