சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை கேரள மாநிலத்துக்கு மாற்றக் கோரிய வழக்குக்கு பதிலளிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை கேரள மாநிலத்துக்கு மாற்றக் கோரிய வழக்குக்கு பதிலளிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சாத்தான்குள தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில் பதில் அளிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய வியாபாரிகள் இரண்டு பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் இருந்த நிலையில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பெரும் கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் சப் இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே கொரோனவால் உயிரிழந்த நிலையில், மற்ற 9 போலீசார் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த சாத்தான்குள தந்தை மகன் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இறுதிகட்ட விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை கேரள மாநிலத்துக்கு மாற்றக் கோரி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக் கோரிய உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் வழக்குக்கு சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube