மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதி கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு. 

மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், எங்களது அடுத்த கட்ட பணியானது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் அடங்கிய மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நகல்களை ஒவ்வோர் இந்திய மொழியிலும் வழங்க இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனோடு, உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும். என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment