#Breaking : நிர்பயா குற்றவாளி மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தா தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங்,   வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பவன் குப்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அவரது மனுவில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பவம் நடந்த போது தான் சிறுவன் என்றும் எனவே சிறார் சட்டத்தின் பலனை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது.அப்பொழுது,பவன் குப்தா மனுவை தள்ளுபடி செய்வதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது.மேலும்  பவன் குப்தா வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.இதற்கு இடையில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பவன் குப்தா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.ஆனால் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இன்று குற்றவாளி பவன் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,சம்பவம் நடைபெற்ற பொழுது தான் ஒரு சிறார். எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.ஆனால் இந்த மனுவை மீண்டும் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Recent Posts

தோனி என்ன வெளியே போனு சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 mins ago

வாக்கு சதவீதத்தில் குளறுபடி… தமிழ்நாடு அறிவித்ததை குறைத்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

31 mins ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

4 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

11 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

13 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

15 hours ago