அவசரச் சட்டத்திற்கு ஆதரவு… அரவிந்த் கெஜ்ரிவால் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு.!

டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்தார்.

டெல்லியில் கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோரி, இன்று ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். முன்னதாக இந்த அவசர சட்டத்திற்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோருவதற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

அவர் இதுவரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்துள்ளார்.

இது குறித்து பேசிய கெஜ்ரிவால், பாராளுமன்றத்திற்கு செல்லும் இந்த அவசர சட்டம் குறித்த விவாகரத்தில், லோக் சபையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறது, ஆனால் ராஜ்யசபையில் 238 உறுப்பினர்களில் 93 உறுப்பினர்களை மட்டுமே பாஜக வைத்திருக்கிறது, இதனால் எதிர்க்கட்சிகள் நாம் ஒன்றிணைந்தால் அவசர சட்டத்தை தோற்கடிக்க முடியும்.

இது டெல்லிக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்தும், இதற்கு எதிராக அனைவரும் களமிறங்க வேண்டும். எங்களுக்கு அனைத்து தரப்பினரிடமும் நல்ல ஒத்துழைப்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். மேலும் இந்த அவசரச் சட்டத்திற்கு ஆதரவாக ஹேமந்த் சோரன் உறுதியளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், ஜனநாயகம், அரசியலமைப்பு, 140 கோடி மக்களுடன் காங்கிரஸ் துணை நிற்கப்போகிறதா அல்லது மோடியுடன் துணை இருக்கப் போகிறதா என்பதை காங்கிரஸ் தான் தீர்மானிக்கவேண்டும் என்று கூறினார்.

author avatar
Muthu Kumar