மாஸ்டர் இயக்குநருடன் சூப்பர் ஸ்டார் - உலகநாயகன்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்

By ragi | Published: Jul 07, 2020 02:21 PM

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவர்169படத்தின் பணிகள் அடுத்த வருடம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து அவர் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.  அந்த படத்தின் வெற்றிக்கு பின்னரே லோகேஷ் கனகராஜ் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க போவதாகவும்,  'தலைவர்169' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அதற்கான பணிகளை ஆரம்பிக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது . சமீபத்தில் கூட இந்த படத்தினை வைவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் ரஜினி மற்றும் கமலின் வயதை மனதில் கொண்டு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்றும், அதாவது அடுத்த வருடத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc