கடந்த 2011ஆம் ஆண்டு புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. சிறந்த கேங் ஸ்டார் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்து இருந்தனர். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், விவேக் பிரசன்னா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனையையும் படைத்தது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.