தளபதி பிறந்த நாள் அன்று விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்…??

தளபதி பிறந்த நாள் அன்று விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்…??

தளபதி 65 படத்திற்கான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூன் மாதம் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. 

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு   வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் பூஜையுடன் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூன் மாதம் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube