கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நோய்கள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நோய்கள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சூப்பர்

By leena | Published: May 29, 2020 08:30 AM

கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நோய்கள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்.

பருவகால மாற்றங்கள் என்பது இயற்கையான ஒன்று. ஆனால், மக்களை பொறுத்தவரையில், அவர்கள்  கடந்து செல்வதற்கு கடினமாக தெரியக் கூடிய காலங்களில் ஒன்று தான் கோடைக்காலம். எவ்வளவு குளிர் இருந்தாலும், மக்கள் குளிர்காலங்களை மிக எளிதாக கடந்து விடுகின்றனர். ஆனால், கோடைகாலத்தை கடந்து செல்வதை தான் மக்கள் சற்று கடினமாக எண்ணுகின்றனர். 

இந்நிலையில், இந்த கோடைகாலங்களில் தான் மக்கள் உடல் ரீதியான பல்வேறு பிராச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த காலங்களில், அம்மை நோய், டைபாயிடு, வேர்க்குரு, தோல் வீக்கம், சூடு கட்டி, உடல் சூடு மற்றும் வயிற்றுக் கோளாறு  போன்ற பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 

கோடைகாலங்களில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமென்றால், நம்மை நாமே கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவுகள் உட்கொள்வதை வழக்கத்தில் கொள்ள வேண்டும். அதற்காக குளிர்ந்த உணவுகளையும் அளவுக்கு அதிகமாகவும் உட்கொள்ள  கூடாது.

மேலும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிகவும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், நமது உடலில் நீர்சத்து வற்றி போகாமல் இருக்க, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். 

Step2: Place in ads Display sections

unicc