உங்கள் முகம் புத்துணர்ச்சியாக இருக்க சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்க்கு தீர்வு காண்பதற்காக மக்கள் பலரும் பல்வேறு இடங்களுக்கு அதிகமான பணத்தை செலவழித்து, செயற்கை மருத்துவ முறையை மேற்கொள்கின்றனர். ஆனால், இவை அனைத்தும் நமக்கு பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது.

தற்போது இந்த பதிவில், முகத்தை எவ்வாறு இயற்கையான முறையில் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • முந்திரி பழம் {உலர்ந்தது} – சிறிதளவு
  • காபித்தூள் – சிறிதளவு

செய்முறை

சிறிதளவு உலர்ந்த முந்திரி பழத்தை மிக்சியில் போட்டு, அதனுடன் சிறிதளவு காப்பி தூள் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்பு நீரால் முகத்தை கழுவி, முகத்தை துணியால் துடைக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சி அடைவதுடன் பளபளப்பாகவும் மாறும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.