பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்.

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது உடல் எடையை குறைக்க பல செயற்கையான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இந்த வழிமுறைகள் பிற்காலத்தில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். நாம் என் பிரச்சனைக்கும் இயற்கையான முரையில் தீர்வு காண்பது தான் சிறந்தது.

தற்போது இந்த பதிவில், பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

ஆப்பிள்

ஆப்பிளை பொறுத்தவரையில், இந்த பழம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய  ஒன்றாகும். இது  நமது  உடலில் உள்ள தேவையற்ற கலோரிகளை எரிப்பதுடன், நீண்ட நேரம் பசி எடுப்பதையும் தடுக்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீ மற்றும் காபி பசியுணர்வை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இந்த டீயை  தேனுடன் கலந்து குடித்தால், மிகவும் சுவையாக இருப்பதுடன், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.

நார்சத்து

நமது உணவில் நார்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளும் நமக்கு பசி ஏற்படுவதை கட்டுப்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

நட்ஸ்

நாம் நமது உணவில் எந்த வகையான நட்ஸ்களை சேர்த்துக் கொண்டாலும், அது நமது உடல் எடையை குறைப்பதற்கு உதவும். மேலும், நொறுக்குதீனிகளுக்கு பதிலாக நட்ஸ்களை சாப்பிடுவது நல்லது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.