45 ஆண்டுகால திரைப்பயணம்.! நீங்கள் இல்லாமல் நான் இல்லை.! சூப்பர் ஸ்டாரின் நெகிழ்ச்சி பதிவு.!

45 ஆண்டுகால திரைப்பயணம்.! நீங்கள் இல்லாமல் நான் இல்லை.! சூப்பர் ஸ்டாரின் நெகிழ்ச்சி பதிவு.!

45 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 45 வருடங்களை வெற்றிகரமாக அதுவும் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தும் விதமாக ரசிகர்கள் அவருக்காக பொதுவான புகைப்படத்தை (Common DP) வெளியிட்டுள்ளனர். அதனை பலரும் வெளியிட்டு தங்கள் வாழ்த்து பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "என்னுடைய திரையுலக பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. " எனவும், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஸ்டேக் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

Latest Posts

அடுத்த 24X7: 15 மாவட்டம்- இடிடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!வானிலை தகவல்
SPB நினைவாக ஆந்திராவில் இசைப்பல்கலைக்கழகம் - சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்!
அமெரிக்காவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 290 கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள்....
12 நாட்கள் கழித்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பருவமழை - இந்திய வானிலை ஆய்வு மையம்
நடிகர் சூர்யாவின் சென்னை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
இன்று  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
இன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!