திடீரென உள்புகுந்த பாண்டிராஜ்.! சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க போவது யார்? டிசம்பர் 12இல் ரிசல்ட்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் கதை கூறி காத்திருக்கும் வேளையில் தற்போது பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளாராம். டிசம்பர் 12இல் ரஜினி பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மட்டும் இல்லை. இந்த கேள்வி ரஜினிக்கே இருக்கும் போல, கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் பெற்றாலும், விமர்சக ரீதியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது.

ஆதலால், மீண்டும் கிராமத்து பின்னணியில் ஒரு ஹிட் கொடுக்க ரஜினி தரப்பு நினைத்துள்ளதாம். அதனால், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜிடம் ஒரு கதை கேட்டுள்ளாராம்.

ஏற்கனவே, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டு ஓகே செய்து வைத்துள்ளாராம். டிசம்பர் 12இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் 169வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை யார் பெறுகிறார்கள், யார் தயாரிக்கிறார் என்கிற விவரம் தெரியவரும் என கூறுகிறார்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.