சூப்பர் ஸ்டார் கடவுள், அப்போம் தளபதி.? பிரபல நடிகை டூவிட்.!

பிரபல பாலிவுட் நடிகையிடம் சூப்பர் ஸ்டார்,தளபதி மற்றும் சூர்யா குறித்து கேட்ட

By ragi | Published: Jun 04, 2020 04:48 PM

பிரபல பாலிவுட் நடிகையிடம் சூப்பர் ஸ்டார்,தளபதி மற்றும் சூர்யா குறித்து கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் ரஜினிகாந்த், விஜய் மற்றும் சூர்யா. இவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். இவர்கள் அனைவருமே பாலிவுட் முதல் டோலிவுட் வரை பிரபலம். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திலும், தளபதி விஜய் மாஸ்டர் படத்திலும் மற்றும் சூர்யா அவர்கள் சூரரை போற்று படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி நேரத்தை செலவிடட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் தலைவர் ரஜினியை குறித்து ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டதற்கு 'கடவுள்' என்றும், இன்னொரு ரசிகர் தளபதி விஜய்யை குறித்து ஒரு வார்த்தையில் கேட்ட போது 'சூப்பர் ஸ்டார்' என்றும் கூறியுள்ளார். மேலும் சூர்யாவை மிகவும் அழகானவர் என்றும் , கோலிவுட்டில் தனக்கு பிடித்த நடிகர் என்றும் கூறியுள்ளார். தற்போது அவரது இந்த டூவிட்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Step2: Place in ads Display sections

unicc