வானில் காட்சியளித்த மிகப்பெரிய சூப்பர் பிங்க் மூன்

ஏராளமான மக்கள் சூப்பர் பிங்க் மூன் வானத்தில் காணப்படும் அரிய நிகழ்வை கண்டு ரசித்தனர்.இது இளஞ்சிவப்பு முழு நிலவு என்று அழைக்கப்ப்டுகிறது.

இந்த நிலவானது  வழக்கமாக தோன்றும் நிலவின் அளவை விட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரிந்தது.பொதுவாக பூமியில் இருந்து வழக்கமாக 384,400 கி.மீ தொலைவில் சுற்றி வருகிறது நிலவு. பூமிக்கு அருகாமையில்  3,57,000 கி.மீ தொலைவில் நீள்வட்டப்பாதையில் வரும்போது, அந்த நாள் பௌர்ணமியாக இருந்தால் மட்டுமே இந்த சூப்பர் மூன் தெரிகிறது.இந்த நிலா கூடுதல் பிரகாசத்துடன் நேற்று இரவு காட்சியளித்தது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கண்டுகளித்தனர்.