சூப்பரான 4 அப்டேட் கொடுத்த சன்பிக்ச்சர்ஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

சூப்பரான 4 அப்டேட் கொடுத்த சன்பிக்ச்சர்ஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று,நாளை , ஞாயிறு மற்றும் டிச.,31 ஆகிய தினங்களில் புது அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது .

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை தயாரித்துள்ளது . தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 65 ,,தனுஷின் D44 , சூர்யாவின் 40வது படத்தையும் தயாரிக்கவுள்ளார் .

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மாஸ்ஸான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் இன்று ,நாளை ,ஞாயிறு மற்றும் 31-ம் தேதி ஆகிய தினங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் ஏதேனும் ஒரு தினத்தில் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அண்ணாத்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கருதப்படுகிறது.அதே போன்று டிசம்பர் 31-ம் தேதி தளபதி65 படத்தின் அப்டேட்டும் , மீதமுள்ள தினங்களில் தனுஷின் D40, சூர்யா 40 ஆகிய படங்களின் அப்டேட் வெளிவர உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Join our channel google news Youtube