சென்னையின் பந்துகளை துவம்சம் செய்த கார்க்..களத்தில் அதிரடி காட்டம்…

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் களமிறங்கினர்.ஆனால் சென்னை வீரர் தீபக் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமல் போல்டானார்.

அடுத்து களமிறங்கிய மணீஸ் பாண்டே, வார்னருடன் இணைந்து சற்று நிதானமாக ஆடிய நிலையில் வார்னர் 28 ரன்களில் அவுட்டாக அவரைத் தொடர்ந்து பாண்டே 29 ரன்களிலும், வில்லியம்ஸன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தது அதிர்ச்சி தந்தனர்.

இதன் பின் களமிறங்கிய அபிஷேக், கார்க் அதிரடி காட்டவே அணியின் ரன் சற்று வேகமாக உயர்ந்தது. இதற்கிடையில் அபிஷேக் 31 ரன்களில் அவுட்டானார்.

அதிரடியை தொடர்ந்த கார்க் 26 பந்துகளில் 51 ரன்களை குவித்தார்,மறுபுறம் அப்துல் சமத் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை ஹைதராபாத் அணிஎடுத்தது.இதனால் சென்னை அணி வெற்றி பெற 165 ரன்கள் இலக்காக நிர்ணியிக்கப்பட்டது.

author avatar
Kaliraj