தனுஷின் பிளாக் பஸ்டர் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள்.! ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.!

தனுஷின் பொல்லாதவன் படத்திற்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் 2017ல்   வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து இந்த படத்தில் ஜெயபாலன், கிஷோர், ஆடுகளம்  நரேன், முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தனுஷிற்கு தேசிய விருதையே வாங்கி கொடுத்து, தனுஷின் மார்க்கெட்டை உயர்த்திய படங்களில் ஒன்றாகும். 

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த டாப்சி, கிஷோர் மற்றும் ஜெயபாலன் ஆகியோருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் யார் என்பதை தெரிவித்துள்ளனர். நடிகை டாப்சிக்கு நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா அவர்களும், கிஷோர் அவர்களுக்கு நடிகர் மற்றும் இயக்குநரான சமுத்திரக்கனி அவர்களும், ஜெயபாலன் அவர்களுக்கு நடிகர் ராதாரவி அவர்களும் டப்பிங் பேசியதாக தெரிவித்துள்ளனர். ஆடுகளம் படத்தில் இந்த பிரபலங்களும் பணியாற்றியுள்ளது யாரும் அறியாத விஷயமாகும். இந்த செய்தி தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.