இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத கதைக்களம்! அகில உலக சூப்பர் ஸ்டாரின் சுமோ ட்ரைலர் இதோ!

  • மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
  • இப்படத்தை கோமாளி, எல்கேஜி, பப்பி ஆகிய படங்களை தயாரித்த வேல்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.

கோமாளி, எல்கேஜி, பப்பி ஆகிய படங்களை தொடர்ந்து வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் சுமோ. இந்த திரைப்படத்தை எஸ்.பி.ஹோசிமின் என்பவர் இயக்கியுள்ளார், மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார்.

ப்ரியா ஆனந்த் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் ஜப்பான் நாட்டின் பிரபலமான விளையாட்டான சுமோ விளையாட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரிந்துள்ளது. காமெடி கலந்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது ட்ரெய்லரில் தெரிகிறது. டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.