ஹரியானா பள்ளிகளில் ஜூன் 15 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு – 50% ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தல்!

ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதுடன், ஆசிரியர்கள் 50% பள்ளிக்கு வருகை தரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் என அனைத்துமே சரியாக திறக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்றே குறைந்து இருந்தாலும், தற்போது வரை அம்மாநிலத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஹரியானாவில் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை  எனவும், அதன் பின் பள்ளிகள் திறக்கலாம் என மாநில அரசு முடிவு செய்திருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறையை நீட்டித்து அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Rebekal