நாளை வெளியாகும் சுல்தான் டிரைலர்..!!

நாளை வெளியாகும் சுல்தான் டிரைலர்..!!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. 

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கான புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் தற்போது படத்திற்கான டிரைலர் வருகின்ற நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்பதால் கார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube