சுல்தான் படத்தின் மேக்கிங் வீடியோ- பார்ட் 2 ..!!

சுல்தான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது. 

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை கடந்த 23 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த டிரைலர் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று யூடியூபில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து சுல்தான் படக்குழு படத்திற்கான மேக்கிங் வீடியோ பார்ட் 2 வை வெளிட்டுள்ளனர்.

இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் பாடலிற்கும், டீசருக்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தை எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.