தொடங்கியதா மூன்றாம் உலகப்போர்.. அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலாக இரு ஏவுகனை தாக்குதல்.. பதட்டத்தில் உலக நாடுகள்…

  • அமெரிக்காவின் ஏவுகனை தாக்குதலுக்கு பதிலடி.
  • நிலையற்ற நிலையில் அந்த பிராந்தியங்கள்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 3ம் தேதி  அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் புரட்சி படையைச் சேர்ந்த முக்கிய தளபதிகளான  சுலைமானி மற்றும் அபு மஹ்தாதி என்ற இரு தளபதிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்க்கு அமெரிக்கா நிச்சயம் பழிவாங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.இந்நிலையில்,  மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த  சூழ்நிலையில்  சரியாக  இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம், மற்றும் ஈராக்கின் பிலாட் என்ற விமான படை தளம் மீது இரு ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தற்போது தகவல்கள்  வெளியாகியுள்ளது. இந்த ஏவுகன தாக்குதல் நடந்த இரு இடங்கள் ஈராக்கின் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலப்பகுதிகள் மற்றும் அமெரிக்க கூட்டு படைகள் தங்கியுள்ள முகாம்கள்  என கூறப்படுகிறது. இந்த பதில் தாக்குதல் அப்பகுதியில் மேலும் பதட்டத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj