மோடியை குற்றம் சாட்டியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.! மாநிலங்களவை எம்.பி பேட்டி.!

எல்லை விவகாரத்தில் மோடி மீது குற்றம் சாட்டி வருவதற்காக காங்கிரஸ்

By manikandan | Published: Jul 08, 2020 08:19 AM

எல்லை விவகாரத்தில் மோடி மீது குற்றம் சாட்டி வருவதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக மாநிலங்களவை எம்.பி சுக்லா.

இந்திய சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இந்த ஆயுதமில்லா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்த எல்லை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக, பேசிய பாஜகவை சேர்ந்தவரும், மாநிலங்களை எம்பியுமான சுக்லா பேசுகையில், ' இந்திய சீன எல்லை விவகாரத்தில் ராஜதந்திரம் மற்றும் இராணுவ அளவிலான இருநாடுகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தைகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் சமீபத்திய இந்திய சீன எல்லை பயணமும் பொதுமக்களிடமும், ராணுவத்தினரிடமும் மன உறுதியை உயர்த்தியுள்ளது.' என கூறியுள்ளார்.

'இதனால், எல்லை விவகாரத்தில் மோடி மீது குற்றம் சாட்டி வருவதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்' என சுக்லா குறிப்பிட்டுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc