, , ,

வெளியேற்றப்பட்ட சுஜித்ரா, வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த அஷீம்!

By

பிக் பாஸ் வீட்டில் இருந்து சுஜித்ரா இன்று வெளியேற்றப்பட்டுள்ளார், மேலும் இந்த வாரம் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக அஷீம் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். 

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் சுஜித்ரா அனிதா, சோம் என பலரும் வெளியேறுவதற்காக வோட்டிங்கில் இருந்தனர். இந்நிலையில், இந்த வாரம் சுஜித்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். ஏற்கனவே அர்ச்சனாவும் சுஜித்ராவும் வைல்ட் கார்டு வழியாக வந்தவர்கள் தான். ஆனால், சுஜித்ராவின் நடவடிக்கையால் ரசிகர்களின் ஆதரவை இழந்து அவர் உடனடியாக வெளியேறிய வேண்டிய நிலைமை வந்துவிட்டது.

அவர் இந்த வாரம் வெளியேறியதும் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். ஏற்கனவே பகல் நிலவ நாடகத்தில் சிவானி உடன் அதில் நடித்து இருந்தார். அந்த நாடகத்தில் அஷீமுக்கும் ஷிவானிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது என ரசிகர்களால் விரும்பி பார்க்கபட்ட ஜோடியாகவும் இருந்தார்கள். இவர் தற்பொழுது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளதால் பாலா ஷிவானிக்கிடையேயான நட்புக்கு என்ன ஆகும். ஷிவானி யார் பக்கம் நிற்பார் என பல்வேறு கேள்விகள் ரசிகர்களால் எழுப்பப்பட்டு கொண்டிருப்பதுடன் மிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Dinasuvadu Media @2023