,

அதிரடி காட்டிய சுஜய்..! கோவை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

By

Kovai Kings won

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய Trichy vs LKK போட்டியில், லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் திருச்சி மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்தது. அதன்பின், 118 ரன்கள் இலக்குடன் கோவை அணியில் முதலில் களமிறங்கிய சுஜய் பொறுப்பாக விளையாடி நல்லத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தார்.

அவருடன் களமிறங்கிய சுரேஷ்குமார் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கோவை அணி வீரர்கள், திருச்சி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், சுஜய் இறுதிவரை நின்று அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார்.

முடிவில், கோவை அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக சுஜய் மட்டுமே 72* ரன்கள் குவித்தார். திருச்சி அணியில் டேரில் ஃபெராரியோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.