ஆன்லைன் ரம்மியில் 30 லட்சத்தை இழந்த சோகத்தில் தற்கொலை – சிக்கிய வாட்ஸாப் வாய்ஸ் மெசேஜ்!

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆன்லைன் ரம்மியில் 30 லட்சத்தை இழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புதுச்சேரி கோர்க்காடு பகுதியை சேர்ந்த 38 வயதாகக்கூடிய விஜயகுமார் என்னும் தனியார் செல்போன் நிறுவன சிம்கார்டு மொத்த விற்பனையாளராக பணி புரியக்கூடிய இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளது. சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் கொரோனோ ஊரடங்கு காலத்தில் பொழுது போக்க வேறு எதுவும் இல்லாததால் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். இந்த விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை விட்டு விட்டு விட்டு 30 லட்சத்துக்கு மேல் இவர் கடன் வாங்கி விளையாடியுள்ளார். அந்த முப்பது லட்சத்தையும் மீட்டெடுக்க முடியாத சோகத்தில் நேற்று காலை புதுக்குப்பம் ஏரிக்கரையில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தானே தற்கொலை செய்து உயிரை மாய்துள்ளார்.
 ஆனால் அவரது மனைவி மதுமிதாவுக்கு இறப்பதற்கு முன்பாக தனது வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்று அனுப்பியுள்ளார். அதில் நான் சரியாக தூங்காமல் கண் மங்கலாக தெரிகிறது என பார்த்தால், நான் ஆன்லைன் ரம்மி விளையாண்டதால் தான் இவ்வாறு நடந்துள்ளது. 30 லட்சத்திற்குமேல் இழந்துள்ளேன். போதையைப் போல இதை விளையாடியது என்னுடைய தப்புதான். சில சமயம் 50 ஆயிரம் ரூபாய் ஜெயித்த நான் பல லட்சத்தை இழந்ததை அறியாமல், விட்ட பணத்தை எடுத்துவிடலாம் என விளையாடிக் கொண்டே இருந்தேன். எப்படி அடிமை ஆனேன் என்று கூட எனக்கு தெரியவில்லை. உன்னையும், என் குழந்தையும் அதிகம் நேசித்தேன். இந்த வருடத்தில் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது.
வேலை செய்ய முடியாத அளவுக்கு ரம்மியில் மூளை மங்கியது. என்ன சொல்வதென்று தெரியவில்லை, குழந்தைகளை என்னை மாதிரி வளர்த்து விடாதே. ஆன்லைனில் நடக்கக்கூடிய விஷயத்தை குழந்தைகளிடமிருந்து தடுக்க முயற்சி செய். அது எனக்கு மன திருப்தியை தரும். என்னுடைய இறப்புக்கு காரணம் முழுவதும் ஆன்லைன் ரம்மி தான். இறந்த பின் ஆவியாக வருவார்கள் என்பதெல்லாம் உண்மையாக இருந்தால் நான் உன்கூட தான் இருப்பேன் எனக்கூறி அவர் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுப்பது நல்லது எனவும் பொதுவாக குறிப்பிட்டுள்ளார். இந்த உருக்கமான ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. எந்த ஒரு விளையாட்டுக்கும் அடிமையாக மாறுவதற்கு முன்பதாக குடும்பத்தினரை குறித்து யோசிப்பது முக்கியம்.
author avatar
Rebekal