32 C
Chennai
Saturday, October 23, 2021

சொத்துக்குவிப்பு வழக்கு: அக்.16 ஆம் தேதி விடுதலை ஆகிறார் சுதாகரன் ..!

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் உள்ள  சுதாகரன்,வருகின்ற 16 ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.

1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில்,ஜெயலலிதா அவர்கள் காலமானதால்,மற்ற மூவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து,பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த நிலையில்,10 கோடி ரூபாய் அபராதத் தொகையை கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செலுத்தினார். அபராத தொகை செலுத்தப்பட்டால் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர், சசிகலா அவர்களுடன் சிறையிலிருந்த இளவரசி பிப்ரவரி 5 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.

ஆனால்,சொத்துக்குவிப்பு வழக்கில் ரூ.10 கோடி அபராதத்தொகை செலுத்தாததால் கூடுதலாக 1 ஆண்டு சிறை தண்டனையை  சுதாகரன் பெற்றார்.

இந்நிலையில்,சசிகலா அவர்களின் சகோதரியான வனிதாமணியின் மகனான சுதாகரன்,வருகின்ற 16 ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சுதாகரன் விடுதலையாக வேண்டிய நிலையில், ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் சிறையில் இருந்த 89 நாட்களை கணக்கிட்டு வருகின்ற  16 ஆம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வளர்ப்பு மகனாக சுதாகரன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

Hot Topics

Read More