பாகிஸ்தான் முழுவதும் திடீர் மின் தடை..இருளில் தவித்த மக்கள்!

தேசிய தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பாகிஸ்தானின் பல நகரங்களில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில்  பல நகரங்கள் இருளில் மூழ்கின.

பல நகரங்களில் ஒரே நேரத்தில் நள்ளிரவுக்கு சற்று முன்பு மின் தடை ஏற்பட்டது. கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத், முல்தான் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் இருளில் தவித்தனர். பாகிஸ்தான் எரிசக்தி மந்திரி உமர் அயூப்கான் கூறுகையில், மின்சார விநியோகத்தை முழுமையாக மீட்டெடுக்க தொழில்நுட்ப குழுக்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், முல்தான், கராச்சி மற்றும் பைசலாபாத் போன்ற பல நகரங்களில் மின்சாரம் பாதி மீட்டெடுக்கப்பட்டது. ஆனால், சாதாரண நிலைக்கு கொண்டு வர சிறிது நேரம் ஆகும் என்று அவர் கூறினார்.

author avatar
murugan