திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

இன்று ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூரில் கடல் 200 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது என கூறப்படுகிறது.

திருச்செந்தூரில் கோவிலை ஒட்டிய பகுதிகளில் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் சிறிது தூரம் வரை உள்வாங்கிய பின் சீராகும். 2 நாட்களுக்கு முன் கடல் உள்வாங்கியது.

இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் திருச்செந்தூரில் கடல் 200 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது என கூறப்படுகிறது. கடலில் உள்ள கடற்பாறைகள், மணல் திட்டுகள் வெளியே தெரிவதால் கடலில் குளிக்க பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். உள்வாங்கிய கடல் பகுதியில் தெரியும் கடற்பாறைகள், மணல் திட்டுகள் மீது பக்தர்கள் ஏறி விளையாடி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

author avatar
murugan