இதுப்போன்ற கோழைத்தனமான செயலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.. விராட் கோலி ஆவேசம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, கேரளாவில் கர்ப்பமான யானை பலியானதை அடுத்து, இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம், பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளாத்தாக்கில் கடந்த 27 ஆம் தேதி காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். அதனை உண்ட யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலநாள் அந்த யானை உணவருந்தாமல் இருந்தது.

மேலும் அந்த யானை ஆறு ஒன்றில் நின்றபடி உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை முடியில், அந்த யானை கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனையடுத்து, யானைக்கு நேரிட்ட இந்த கொடூரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “கேரளாவில் நடந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டேன். நாம் நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.