ஆதரவு கடிதம் சமர்ப்பிப்பு.. தென்னரசுக்கு 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு!

ஆதரவு கடிதம் சமர்ப்பிப்பு.. தென்னரசுக்கு 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவு.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்ப கடிதத்தை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சமர்ப்பித்தார். அதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுகவின் இருதரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் இபிஎஸ் தரப்பு தென்னரசு என தீர்மான நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் கடிதம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு, கையொப்பமிட்டு திரும்ப பெறப்பட்டது.

இந்த நிலையில், ஒப்புதல் கடிதம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 2,665, அதில் 2,501 பேர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் தரப்பில் படிவங்களை 128 பேர் பெற்றிருந்த நிலையில், ஒருவர் கூட படிவத்தை தென்னரசுக்கு எதிராக அவைத்தலைவரிடம் வழங்கவில்லை.

பொதுக்குழு உறுப்பினர்களில் 15 பேர் மறைவு, 2 பேரின் பதவி காலம் காலாவதியாகிவிட்டது. 2 பேர் மாற்று கட்சியில் ஐக்கியம் ஆனர். மேலும், வேட்பாளர் ஒப்புதல் விண்ணப்ப படிவம் 17 பேருக்கு சென்று சேரவில்லை என்றும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவளித்துள்ளனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் ஆதரவு தெரிவித்திருப்பதால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆதரவு கடிதத்தின் மீது தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கலாம் என தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். மேலும்,  இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *