பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை தவறவிட்ட மாணவர்கள்..! பனிஸ்மென்ட் வழங்கிய கல்லூரி நிர்வாகம்..!

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியின் நூறாவது நிகழ்ச்சியை காண தவறிய 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல தடை. 

கடந்த 30ஆம் தேதி பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் நூறாவது நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காண்பதற்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அந்த வகையில் சண்டிகர் மாநிலத்தில் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியின் நூறாவது நிகழ்ச்சியை காண தவறிய 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்வதற்கு தடை விதித்து தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சியை கட்டாயமாக காண வேண்டும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை பின்பற்றாத நிர்வாகம் என் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.