அப்துல்கலாமின் நேர்மையை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே தனது கவனத்தையும், உழைப்பையும் செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக வளம் வருகிறார்.
நடிகர் விவேக்கை பொறுத்தவரையில், இவர் மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு என இயற்கையின் மீது அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து, சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் மரம் நாடு விழாவில், நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், அப்துல்கலாமின் கடுமையான உழைப்பே, நேர்மையை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பிட்சா, பர்கர் போன்ற உணவுகள் உடல் நலத்திற்கு நல்லதல்ல. இட்லி தான் உடலுக்கு நல்லது. மாணவர்கள் தாய்மொழி மற்றும் ஆசிரியர்களையும் நேசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.